அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபாய் பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாயாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்து உள்ளது.
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்க தெரிவிக்கையில், “தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் முற்பணமாக வழங்கப்படுகின்றது. எனினும் தற்போதைய பொருளாதார சூழலில் இதனை குறைந்தபட்சம் 40,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.