குருத்தோலை ஞாயிறு இன்று... தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு

குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

மார்ச் 24, 2024 - 14:27
குருத்தோலை ஞாயிறு இன்று... தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது. 

குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறு என்று குருத் தோலையை ஏந்தி பவனியாக சென்று பின்னர் சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இன்று அதிகாலை முதலே பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 

தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓசன்னா கீர்த்தனைகளை பாடியவாறு பேரணியாக சென்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!