படியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

மரணக் கிணற்றின் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜுன் 22, 2023 - 13:34
படியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, ​​மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (21)  காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயது 11 மாதங்களான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மரணக் கிணற்றின் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக மரணக் கிணற்றின் பாதுகாப்பு மற்றும் அலங்காரத்துக்காக குழந்தையின் தந்தை வந்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!