இரண்டு நாட்களில் வெளிப்படுத்துவேன்... தேர்வுக்குழு தலைவர் அதிரடி
இது தொடர்பான அனைத்து உண்மைகளும் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.

2023 ஐசிசி உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பின்னடைவுக்காக காரணங்களை வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணி வெளியேறி நாடு திரும்பியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க இதனை இன்று (10) கூறியுள்ளார்.
சதித்திட்டம் தீட்டியுள்ள குழுவினர் இலங்கை கிரிக்கெட்டைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய விக்ரமசிங்க, இது தொடர்பான அனைத்து உண்மைகளும் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.
ஏமாற்றத்துடன் உலகக் கிண்ண பயணத்தை முடித்துக் கொண்ட இலங்கை அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. 7 தோல்விகளை சந்தித்த இலங்கை அணியால் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பலவீனமான துடுப்பாட்ட வரிசை, காயங்கள் மற்றும் மற்ற அணிகளை விட அதிக பிடியெடுப்புகளை கைவிட்டதால், இலங்கை கிரிக்கெட் அணி, தொடர் முழுவதும் பின்னடை சந்தித்திருந்தது.