இரவு நேர வீதியோர உணவுக் கடைகளில் சோதனை
கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதியோர உணவு விற்பனை நிலையங்களை இன்று சோதனையிட்டனர்.

கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதியோர உணவு விற்பனை நிலையங்களை இன்று சோதனையிட்டனர்.
இதன்போது, பல இடங்களில் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் வெள்ளவத்தை மாவட்ட இலக்கம் 5 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உணவு பரிசோதகர்கள் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய பகுதிகளுக்கு அண்மித்த காலி வீதியின் கடல் வீதியிலுள்ள இரவு உணவு விற்பனை நிலையங்களை பார்வையிட்டனர்.
இதன்போது, மனிதர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற உணவுகளை விற்கும் பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 6 கடைகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.