கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம் - வெளியான தகவல்

சிலர் இரவு முழுவதும் உணவு, கழிப்பறை வசதியின்றி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 28, 2024 - 20:32
கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம் - வெளியான தகவல்

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்டவர்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

சிலர் இரவு முழுவதும் உணவு, கழிப்பறை வசதியின்றி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பதாரர்களுக்கு முறையான முறையை அமல்படுத்த தவறியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அதன் இணைய வழியிலான கடவுச்சீட்டு முறையை அண்மையில் நீக்கியதை அடுத்து இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாறாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், திணைக்களம் வெற்று கடவுச்சீட்டு புத்தகங்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதால், வரையறுக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!