இலங்கை சந்தையில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை சந்தையில் தேங்காய் விலை குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சந்தையில் தேங்காய் விலை குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் தேங்காய் ஒன்றின் விலை சுமார் 250 ரூபாயாக காணப்பட்டதுடன், தற்போது 200 மற்றும் 220 ரூபாய்க்கு குறைந்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை மேலும் அதிகரிக்கலாம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தேங்காய் ஒன்றின் விலை 70 முதல் 100 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது.
வரலாறு காணாத வகையில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வால் நுகர்வோர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.