பாடசாலை விடுமுறையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு
பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“உயர்தரப் பரீட்சை தினம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது.
இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும்.
இதேவேளை, பாடசாலை விடுமுறை இம்முறை டிசெம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்