பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
மின் கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 36 சதவீத வருமான வரியும் 15 சதவீத வற் வரியும் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அவ்வாறு இல்லாவிட்டால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளதுடன், மின் கட்டண அதிகரிப்பால் தமது தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மின் கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 36 சதவீத வருமான வரியும் 15 சதவீத வற் வரியும் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தால் நுகர்வோர் கொள்வனவு செய்யும் அளவு குறைவடையும் என்றும், இதனால் தமது தொழிற்துறை மேலும் சிக்கலை எதிர்நோக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெதுப்பக உற்பத்திகளின் விலையினை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்தும் பேணுவதானால் அரசாங்கத்தின் மின் கட்டண உயர்வு மற்றும் வரிக்கொள்கை தீர்மானங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.