அடுத்த வருட முதல் பாதியில் பாராளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு?
2024ஆம் ஆண்டு முதல் பாதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு முதல் பாதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிகாலம் 2025ஆம் ஆண்டுவரை இருக்கிறது.
இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே, பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தினால் ஏற்படும் அரசியல் ரீதியிலான தாக்கங்கள் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.