இலங்கையில் சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுன் 20, 2023 - 14:55
இலங்கையில் சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை

சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி, 1 கிலோ கிராம் செயற்கை வண்ணமூட்டப்பட்ட மற்றும் நிறமற்ற சீமெந்துக்கு விதிக்கப்பட்ட CESS வரியானது 3 ரூபாயிலிருந்து  ரூ. 5.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் மற்ற போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 5 இலிருந்து ரூ. 8.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை 50 கிலோவுக்கு மேலான சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 3.00 முதல் ரூ. 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!