காய்ச்சல் நீடித்தால் எச்சரிக்கை... மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 25, 2023 - 14:32
காய்ச்சல் நீடித்தால் எச்சரிக்கை... மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, கொவிட் தொற்று பரவிய காலப்பகுதியில் பின்பற்றிய சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம் என திணைக்களம் கூறியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, JN1 எனப்படும் கொவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நாட்களில் இருமல் அல்லது சளி இருந்தால், முகக்கவசங்களை அணியுமாறும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!