அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு
அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின்(SLFEA) உதவியுடன் இந்த தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என வொஷிங்டன் டி.சியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தொழில் வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதரகம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட தாதியருக்கான 250 தொழில் வாய்ப்புகள், இரசாயன ஆய்வுக்கூட தொழிற்நுட்ப கலைஞர்களுக்கான 100 தொழில் வாய்ப்புகள் மற்றும் தாதி உதவியாளர்களுக்கான 200 தொழில் வாய்ப்புகள் அமெரிக்காவில் வழங்கப்பட உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.