வரி வருவாயை அதிகரிக்கலாம்; தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம், இன்று (02) காலை வெளியிடப்பட்டது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 வருடங்களுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாக, இந்நிகழ்வில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் குறிப்பாக தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வரி வருவாயையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது அரசாங்கத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்குள் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.