தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுன் 16, 2024 - 14:42
ஜுன் 16, 2024 - 14:43
தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்ட பெண்கள், ஆண்கள் ஆகிய இருசாராரிடம் இருந்தும் விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன. 

இது தொடர்பான வர்த்தமானி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆண்களும் பெண்களும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 
 
இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இரவு 9 மணிவரையில் மாத்திரமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!