தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அனுமதி
ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் எண் 3 இல் தனியார் துறையின் சம்பளங்களை 2025 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் அண்மைய அரச ஊழியர்களின் ஊதிய உயர்வுகளுடன் சீரமைக்கும் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏப்ரல் 1, 2025 முதல்:
தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 17,500 ரூபாயில் இருந்து 27,000 ரூபாய் வரை 9,500 ரூபாயால் உயர்வு.
தேசிய குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 700 ரூபாயில் இருந்து 1,080 ரூபாய் வரை 380, ரூபாயால் உயர்வு.
ஜனவரி 1, 2026 முதல்:
தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 27,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை 3,000 ரூபாயால் உயர்வு.
தேசிய குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,080 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரை 120 ரூபாயால் உயர்வு.
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கிடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.