இன்று முதல் பொது போக்குவரத்துகளில் விசேட நடைமுறை

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது போக்குவரத்து சேவையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 7, 2024 - 23:28
இன்று முதல் பொது போக்குவரத்துகளில் விசேட நடைமுறை

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது போக்குவரத்து சேவையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை, மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக இந்த விசேட நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இரகசிய கமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோதகத்தர்கள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!