ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜுன் 11, 2024 - 15:30
ஜுன் 11, 2024 - 15:40
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11)  காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பஸ், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் என்பன இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளன.

விபத்தை அடுத்து, பஸ் சாரதி கைது செய்யப்பட்டதுடன்,  சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கினிகத்தேன பொலிஸார் கூறினார்.

இந்த விபத்து காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!