இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வால் 4% பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் 4% பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறைந்தபட்ச கட்டணமான 30 ரூபாய் மாற்றப்படவில்லை.
இதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மீன்பிடி நடவடிக்கைகள் நெருக்கடியான சூழலாக மாறியுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு அதிக செலவு ஏற்படுவதால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.