நாளை முதல் பஸ் கட்டணமும் அதிகரிப்பு?
வற் திருத்தம் காரணமாக பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வற் திருத்தம் காரணமாக பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் சோற்றுப்பொதி, ப்ரைட் ரைஸ், கொத்துரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட உள்ளது.
அத்துடன், தேநீரின் விலையை 5 ரூபாயினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாயினாலும் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் அமுலாகும் வற் திருத்தத்துடன், நீர் கட்டணமும் 3 சதவீதத்தால் அதிகரிக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, முக்கிய அலைபேசி சேவை வழங்குனர்களும் வற் திருத்தத்துக்கு ஏற்ப தமது அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களையும் மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.