தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்
இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்து புத்தள பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலையில் இன்று (13) முற்பகல் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு திரும்பிய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்து புத்தள பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். (நியூஸ்21)