ஹட்டனில் பஸ் விபத்து: மூவர் பலி; 40 பேர் காயம் 

ஹட்டனில் இருந்து கண்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிசம்பர் 21, 2024 - 17:11
ஹட்டனில் பஸ் விபத்து: மூவர் பலி; 40 பேர் காயம் 

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து  இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹட்டனில் இருந்து கண்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் 5 வயது சிறுவன், வயோதிபர்கள் இருவர் (ஆண், பெண் ) என மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் சிலர் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!