Breaking: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்
Sri Lanka Cricket: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைகால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka Cricket: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைகால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதுடன் அதனை அடுத்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை அணியின் தொடர்சியான தோல்விகளை அடுத்து, பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (News21.lk)