இளம் தாய் மற்றும் குழந்தையின் சடலம் காட்டுப்பகுதியில் மீட்பு
காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் சிசுவின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

ஹொரணை, அங்குருவத்தோட்ட காட்டுப் பகுதியில் இருந்து, காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது பெண் குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹொரணை, அங்குருவத்தோட்ட ரத்மல்கொட பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மனைவியும் பெண் குழந்தையும் வீடு திரும்பிய போது காணாமல் போனதாக பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.