யாரை கேட்டு செய்தீங்க? விராட் கோலிக்கு கடும் எச்சரிக்கை.. விதிகளை மீறியதாக புகார்
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விராட் கோலி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில் விராட் கோலி, நான் வெற்றிகரமாக யோ யோ டெஸ்ட் முடித்துவிட்டேன். 17.2 என்ற ஸ்கோர் வந்திருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு தற்போது பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் பிசிசிஐ வீரர்களுக்காக வைத்துள்ள குறைந்தபட்ச ஸ்கோரே 16.5 தான்.
ஆனால் விராட் கோலியை 17.2 என்று அளவில் தான் வந்திருக்கிறார். ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக வெளியே எந்த கருத்தும் கூறாத நிலையில் விராட் கோலியின் அந்த பதிவு தான் தற்போது பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இதனை அடுத்து பிசிசிஐ நிர்வாகிகள், வீரர்களிடம் பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு விஷயங்களையும் ரகசிய தகவல்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட வேண்டாம் என கண்டிப்பாக வாய்மொழி உத்தரவாக அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வீரர்கள் பயிற்சி செய்யும் போது எடுக்கும் புகைப்படம் வீடியோ ஆகியவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட எந்த தடையும் இல்லை என்றும் ஆனால் பயிற்சியில் என்ன ஸ்கோரைப் பெற்றீர்கள் என்பது குறித்து வெளியிடக்கூடாது என்றும் பி சி சி ஐ யை கருத்து தெரிவித்துள்ளது.
இது வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்தத்திலே தெளிவாக குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் பிசிசிஐ கூறி இருக்கிறது.
தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பயிற்சி முகாம் வரும் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதனை அடுத்து இலங்கைக்கு செல்லும் இந்திய அணி வரும் இரண்டாம் தேதி பாகிஸ்தானுடன் தங்களது முதல் ஆட்டத்தில் மோத உள்ளது.