பெட்டிகலோ கெம்பஸ் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு
COLOMBO (News21); ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் வளாகம் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

COLOMBO (News21); ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் வளாகம் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள மட்டக்களப்பு கெம்பஸ் நேற்று (20) விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (20) நேரடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.