ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மார்ச் 3, 2025 - 19:47
ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

கடந்த வருடம்  மே மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, வழக்கில் பெயரிடப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான் உட்பட 10 சந்தேக நபர்களை, தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சான் குலத்துங்க ஆகியோர் ஆஜராகினர். 

அதேநேரம் களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு சார்பாக சட்டத்தரணிகளான பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் பிரசன்னமாகினர்.

இதேவேளை, வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!