2 பந்தில் 21 ரன்கள் சாத்தியமானது எப்படி? அடித்து காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்

நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி தனது 2வது ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஹெட். அடுத்த பந்து நோ பால் ஆனது. அதில் ஹெட் ஒரு ரன் எடுத்தார்.

ஒக்டோபர் 28, 2023 - 16:33
2 பந்தில் 21 ரன்கள் சாத்தியமானது எப்படி? அடித்து காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியாவின் இமாசல பிரதேசத்தின் தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி தனது 2வது ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஹெட். அடுத்த பந்து நோ பால் ஆனது. அதில் ஹெட் ஒரு ரன் எடுத்தார்.

அடுத்த பந்தும் நோ பால் ஆனது. அதில் வார்னர் சிக்சர் அடித்தார். அடுத்த பந்திலும் வார்னர் சிக்சர் அடித்தார்.

6, 1-NB, 6-NB, 6 என 2 பந்தில் ஆஸ்திரேலியா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக ஆடிய வார்னர் 65 பந்தில் 81 ரன்னும், டிராவிஸ் ஹெட் 67 பந்தில் 109 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!