அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
இரண்டாம் கட்டத்துக்காக இதுவரை 54,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

அஸ்வெசும உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதி நிறைவடைய உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்துக்காக இதுவரை 54,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.
அத்துடன், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில், மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய நான்கு சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது முதல் கட்டத்தின் கீழ் 18 லட்சத்து 54,000 பேர் கொடுப்பனவை பெற உரிமை பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.