அஸ்வெசும வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மே 31, 2024 - 13:50
மே 31, 2024 - 13:53
அஸ்வெசும வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணம் பெறுவோரில் சுமார் 125,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த நிவாரணத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள பலர் இதுபோன்று வங்கி கணக்குகளை திறக்கவில்லை என்றும் அடுத்த சில வாரங்களில் நிவாரணம் தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிவாரணப் பயன் பெறத் தகுதியான உண்மையான வறிய நிலையில் உள்ள மக்கள் தவறியிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் முதல் சுற்றில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும், புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் சமூக பாதுகாப்பு தரவு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!