அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் - வெளியான அறிவிப்பு
பாராடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நலன்புரி கொடுப்பனவு வழங்கலில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான வழிமுறைகள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.