ஆசிய கோப்பை 2023 - இலங்கை,  பங்களாதேஷ் இன்று மோதல்.. 2 அணியிலும் முக்கிய வீரர்கள் இல்லாததால் சோகம்

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன இலங்கை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 31, 2023 - 12:18
ஆசிய கோப்பை 2023 - இலங்கை,  பங்களாதேஷ் இன்று மோதல்.. 2 அணியிலும் முக்கிய வீரர்கள் இல்லாததால் சோகம்

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன இலங்கை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கையும், பங்களாதேஷ் தற்போது எதிரும் புதிருமாக மாறிவிட்டார்கள். களத்தில் ஒருவர் வெற்றி பெற்றால் மற்றவர்களை பார்த்து நாகினி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றுவார்கள்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் முடிவில் யார் நாகினி டான்ஸ் ஆட போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் அவளுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். எனினும் இரு அணிகளிலும் ஸ்டார் வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாதது பின்னடைவாக கருதப்படுகிறது. 

இலங்கை அணியில் துஷ்மந்த சமீர, லகிரு குமார, தில்ஷான் மது ஷங்க போன்ற வேகப்பந்துவீச்சாளரும் ஹசரங்க போன்ற சுழற்பந்துவீச்சாளரும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

ஆசிய கோப்பை - 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை நொறுக்கிய பாபர் அசாம் படை

எனினும் அந்த அணியில் சிஎஸ்கே வீரர் மகிஷ் தீக்ஷன மற்றும் மதிஷா பதிரான போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் இலங்கை அணி பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும். 

இதனால் கருணரத்ன, நிசாங்க, அசலங்க, தனஜெய டி சில்வா, சானக போன்ற வீரர்கள் தலையில் மிகப்பெரிய பாரம் இருக்கிறது.

இதேபோன்று பங்களாதேஷ் அணியிலும் லிட்டன் தாஸ் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகி இருப்பது பெரும் சரிவை அந்த அணிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. 

இதனால் ஷகிபுல் ஹசன் முஸ்பிகுர் ரஹீம், மெஹந்தி ஹசன், டஸ்கின் அஹமத் போன்ற வீரர்கள் பெரிய இன்னிங்ஸை ஆடினால் மட்டுமே இலங்கையை கட்டுப்படுத்த முடியும்.

ஆசிய கோப்பை -  கோலி, ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்த பாபர் அசாமின் 3 இமாலய சாதனைகள்..!

கடைசியாக பங்களாதேஷ் அணி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கும். 

இரு அணிகளும் 51 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் மோதி இருக்கிறார்கள்.இதில் பங்களாதேஷ்  ஒன்பது முறை வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கை 40 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 

இரண்டு போட்டிகள் மழையால் தடை பட்டிருக்கிறது. இன்றை போட்டியில் மதிய நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!