ஆசிய கோப்பை 2023 -  கோலி, ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்த பாபர் அசாமின் 3 இமாலய சாதனைகள்..!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் விளாசி சாதனை படைத்திருக்கிறார். 

ஆகஸ்ட் 31, 2023 - 12:07
ஆகஸ்ட் 31, 2023 - 12:18
ஆசிய கோப்பை 2023 -  கோலி, ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்த பாபர் அசாமின் 3 இமாலய சாதனைகள்..!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் விளாசி சாதனை படைத்திருக்கிறார். 

பாகிஸ்தான் அணி 21 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த நிலையில் பாபர் அசாம் களத்திற்கு வந்தார்.

அப்போது இமாம் உல் ஹக் ரன் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 25 ரன்னுக்குள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும் பதற்றம் அடையாத பாபர் அசாம், தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாம் ஏன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

131 பந்துகளை எதிர் கொண்ட பாபர் அசாம், 151 ரன்கள் என்ற இமாலய தனி நபர் ஸ்கோரை எட்டினார். பாபர் அசாமின் இன்னிங்ஸில் 14 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் சேரும். 

இந்த இன்னிங்ஸ் மூலம் பாபர் அசாம் பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 150 ரன்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்திருக்கிறார்.

மேலும் 102 இன்னிங்ஸில் பாபர் அசாம் தன்னுடைய 19 ஆவது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் அதிவேகமாக 19 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றிருக்கிறார். 

ஹசீம் அம்லா 102 இன்னிங்சில் 18 சதங்களும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் 14 சதங்களும், ஆஸ்திரேலிய வீர டேவிட் வார்னர் 14 சதங்களும் அடித்துள்ள நிலையில் பாபர் அசாம் 19 சதம் அடித்துள்ளார்.

மேலும் கேப்டனாக முதல் 30 இன்னிங்சில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றிருக்கிறார். பாபர் அசாம் 8 சதம் அடித்த நிலையில் விராட் கோலி ஆறு சதமும் கங்குலி 5 சதமும் அடித்திருக்கிறார்கள். 

மேலும் அணி 300 ரன்களுக்கு மேல் அடித்தபோது அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் .

சச்சின் 86.8 சராசரியுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 85 சராசரியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில் பாபர் அசாம் 82.2 சராசரி உடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். 

இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் இல்லாமல் அதிக முறை 150 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

பாபர் அசாம் இரண்டு முறை 150 ரன்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி ஐந்து முறையும் விவியன் ரிச்சர்ட்ஸ் மூன்று முறையும் அடித்திருக்கிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!