ஆசிய கோப்பை 2023 - உலகின் நம்பர் 1 அணி என நிரூபித்த பாகிஸ்தான்
ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் அணி 7 விக்கெகட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் அணி 7 விக்கெகட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானும் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் மோதின.
இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மெஹதி ஹசன் டக் அவுட்டாகி வெளியேற அந்த அணியின் அனுபவ வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்தார்.
பங்களாதேஷ் அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனை அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு நட்சத்திர வீரர்கள் மற்றும் முஸ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். ஷகிபுல் ஹசன் 57 பந்துகளில் 53 ரன்களும், முஸ்பிகுர் ரஹீம் 64 ரன்களிலும் பெவிலியன் திரும்ப பங்களாதேஷ் அணியின் சரிவு மீண்டும் தொடங்கியது.
உலகக்கோப்பை 2023 - டிராவிட், ரோஹித் இருந்தும் அதே தப்பு எப்படி நடந்தது? சிக்கலில் இந்திய அணி!
174 ரன்கள் 5 விக்கெட் என்ற நிலையில் பங்களாதேஷ் இருந்தபோது இருவரும் ஆக்ரோஷமாக பந்து வீசியதால் மேலும் 19 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சியுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணி இழந்தது.
இதன் மூலம் 38.4 ஓவர்களில் எல்லாம் பங்களாதேஷ் அணி 193 ரன்களில் ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஹரிஷ் ரவுப் ஆறு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
நசிம் ஷா மூன்று விக்கெட்டுகளையும் ஆப்ரிடி ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
ஃபக்கர் சமான் 20 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 17 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து இமாம் உல் ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இமாம் எல் ஹக் 84 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 வக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.