“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- மோடி பேச்சு!

 ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு: இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்று வரும் ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. 

செப்டெம்பர் 7, 2023 - 13:05

ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளனர். 

இதில் அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மற்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைத் தனித்தனியே நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுக் குறித்தும், வர்த்தகம், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நாளை (செப்.08) இந்தியாவில் ஜி20 மாநாடு தொடங்கவுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இந்தோனேசியா பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று மாலையே டெல்லிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!