10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வெளியான அறிவிப்பு

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று  ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜுலை 24, 2023 - 14:27

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி அமைப்புகளில் தற்போது 12,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடுத்து தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் தற்காலிக பணியாளர்கள், மாற்று  ஊழியர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 10,000 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!