வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடந்த வாரம் பயிற்சி முடித்த 590 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் தற்போது பயிற்சியை முடித்து வருவதாக சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் பயிற்சி முடித்த 590 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.