அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும திட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம் என்பதுடன், அதில் 18 இலட்சம் பேர் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ம் திகதியுடன் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.