பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஜனவரி 22, 2024 - 15:02
ஜனவரி 22, 2024 - 15:14
பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், 'எங்கள் மக்கள் கட்சி' என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்..

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!