வெற்றியை நோக்கி அநுர! 

நேற்று இரவு முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அதிகூடிய வாக்குகளுடன் அவர் முன்னிலை வகிக்கின்றார்.

செப்டெம்பர் 22, 2024 - 11:03
வெற்றியை நோக்கி அநுர! 

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.

நேற்று இரவு முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அதிகூடிய வாக்குகளுடன் அவர் முன்னிலை வகிக்கின்றார்.

இன்று அதிகாலை வரை 15 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 13 மாவட்டங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 

அத்துடன், மாவட்டங்களில் உள்ள பிரதேச தேர்தல் தொகுதிகளின் முடிவுகளும் இன்று அதிகாலை முதல் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீதத்துக்கும் மேல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வருவதால், இரண்டாம் சுற்றுக்குக்குச் செல்லாமல் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று மாலைக்கு முன்னர் தேர்தல் முடிவுகளின் அறிவிப்புக்கள் நிறைவுக்கு வரும் என்றும், இன்று மாலை அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இருந்து ஹர்ஷ டி சில்வா எம்.பி, தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்திருந்ததாகவும் ஆனால், தற்போது அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி தெளிவாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  அநுர வருவார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 


தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

கொழும்பு மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 20,864
* ரணில் விக்கிரமசிங்க- 7,645
* சஜித் பிரேமதாஸ – 4,080
* நாமல் ராஜபக்ஷ – 561

இரத்தினபுரி மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 19,185
* ரணில் விக்கிரமசிங்க – 6,641
* சஜித் பிரேமதாஸ – 4,675
* நாமல் ராஜபக்ஷ – 500

பொலனறுவை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 11,768
* சஜித் பிரேமதாஸ – 4,120
* ரணில் விக்கிரமசிங்க – 2,762
* நாமல் ராஜபக்ஷ – 188

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 14,482
* சஜித் பிரேமதாஸ – 3,397
* ரணில் விக்கிரமசிங்க – 2,502
* நாமல் ராஜபக்ஷ – 819

மொனராகலை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 14,050
* சஜித் பிரேமதாஸ – 5,733
* ரணில் விக்கிரமசிங்க – 3,401
* நாமல் ராஜபக்ஷ – 470

காலி மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 25,892
* ரணில் விக்கிரமசிங்க – 7,226
* சஜித் பிரேமதாஸ – 5,338
* நாமல் ராஜபக்ஷ – 863

திருகோணமலை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 5,480
* சஜித் பிரேமதாஸ – 4,537
* ரணில் விக்கிரமசிங்க – 3,630
* பா.அரியநேத்திரன் – 431
* நாமல் ராஜபக்ஷ – 129

மட்டக்களப்பு மாவட்டம்

* ரணில் விக்கிரமசிங்க – 5,967
* சஜித் பிரேமதாஸ – 3,205
* அநுரகுமார திஸாநாயக்க – 2,479
* பா.அரியநேத்திரன் – 901

அம்பாறை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 11,120
* சஜித் பிரேமதாஸ – 7,368
* ரணில் விக்கிரமசிங்க – 6,719
* நாமல் ராஜபக்ஷ – 318
* பா.அரியநேத்திரன் – 233

வன்னி மாவட்டம்

* சஜித் பிரேமதாஸ –  4,899
* ரணில் விக்கிரமசிங்க – 4,257
* அநுரகுமார திஸாநாயக்க – 2,092
* பா.அரியநேத்திரன் – 1,160

மாத்தளை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 12,186
* ரணில் விக்கிரமசிங்க – 4,243
* சஜித் பிரேமதாஸ – 3,816
* நாமல் ராஜபக்ஷ 372

நுவரெலியா மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 8,946
* ரணில் விக்கிரமசிங்க – 5,087
* சஜித் பிரேமதாஸ – 4,334
* நாமல் ராஜபக்ஷ – 308

மாத்தறை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 19,712
* ரணில் விக்கிரமசிங்க – 5,088
* சஜித் பிரேமதாஸ – 4,041
* நாமல் ராஜபக்ஷ – 543

அநுராதபுரம் மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 32,750
* சஜித் பிரேமதாஸ – 10,956
* ரணில் விக்கிரமசிங்க – 8,218
* நாமல் ராஜபக்ஷ – 783

கேகாலை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 20,062
* ரணில் விக்கிரமசிங்க – 7,229
* சஜித் பிரேமதாஸ – 5,604
* நாமல் ராஜபக்ஷ – 482

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!