மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் மற்றுமொரு குழு மீட்கப்பட்டுள்ளது

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
11 இளைஞர்களும் இரண்டு யுவதிகளும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்து எல்லையில் இருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள், அதன்பின்னர், இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இதற்கிடையில், மற்ற நால்வரும் மியான்மரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கூடிய விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என வெளிவிவகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.