மற்றொரு பயங்கரமான விபத்து; 4 பேர் பலி
லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.