முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் முதியவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு இன்று (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 592,766 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 2,963 மில்லியனுக்கும் (ரூ. 2,963,830,000) அதிகமாக பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் ஜெயந்த வீஜரத்ன தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் முதியவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.