பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என அவர் கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்தில் கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.