இளையராஜா இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! 

இதனையடுத்து கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பெப்ரவரி 2, 2024 - 12:02
இளையராஜா இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! 

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த இசை நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

இதனையடுத்து கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி நிகழ்ச்சியினை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!