2022ஆம் ஆண்டிற்கான சாதாரண, உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும்.
இது ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.