கும்ப்ளேவின் ரெக்கார்டுக்கு அஸ்வினால் ஆபத்து.. யாதவை சேருங்கள் என ஐடியா!

வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜுலை 16, 2023 - 13:07
கும்ப்ளேவின் ரெக்கார்டுக்கு அஸ்வினால் ஆபத்து.. யாதவை சேருங்கள் என ஐடியா!

வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ள அஸ்வின் தற்போது கும்ப்ளேவின் ரெக்கார்டை குறி வைத்து இருக்கிறார். 

இந்த நிலையில் அணில் கும்ப்ளே அளித்துள்ள பேட்டியில் எந்த அணியாக இருந்தாலும் குல்தீப் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்க வேண்டும். 

ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரராக திகழ்கிறார். லேக் ஸ்பின்னர் எதிரணியை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள்.

ஜாலியாக மைதானத்திலேயே டான்ஸ் ஆடி கொண்டாடிய விராட் கோலி.. 

சில சமயம் நிறைய ரன்கள் அவர்கள் கொடுக்கலாம். எனினும் அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் லேக் ஸ்பின்னர்கள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். 

டெஸ்டிலும் குல்தீப் யாதவும் சிறந்த வீரராக இருப்பார். இந்தியாவுக்காக பல போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் குல்தீப் யாதவை நாம் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் பார்க்க முடியாது.

ஏனென்றால் அஸ்வினும் ஜடேஜாவும் தற்போது சிறப்பான பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அக்சர் பட்டேல் மூன்றாவது சுழற் பந்து வீச்சாளராக வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து சாதித்த அஸ்வின்!

இதனால் குல்தீப் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் அணியில் சேருங்கள் என கும்பளே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது குல்தீப் யாதவ் இல்லை. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் குல்தீப் அணியில் இருக்கிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என கும்ப்ளே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!