ஜாலியாக மைதானத்திலேயே டான்ஸ் ஆடி கொண்டாடிய விராட் கோலி.. 

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஜுலை 15, 2023 - 19:59
ஜாலியாக மைதானத்திலேயே டான்ஸ் ஆடி கொண்டாடிய விராட் கோலி.. 

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும் விளாசினர். 

இதன் மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால் அஸ்வினின் அபார பந்துவீச்சால் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

என்னய்யா இது.. ஒரு பவுண்டரி அடிக்க 81 பந்துகளா... விராட் கோலி செய்த அலப்பறை!

சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

மூன்றே நாட்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் விராட் கோலியும் மைதானத்திலேயே கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. 

3ஆம் நாள் ஆட்டத்தின் ஓய்வு நேரத்தின் போது, இந்திய வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்த விராட் கோலி, திடீரென டான்ஸ் ஆடினார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அண்மை காலமாக நல்ல மனநிலையில் கிரிக்கெட்டை விளையாடி வரும் விராட் கோலி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 4 இன்னிங்ஸ்களில் மட்டும் ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசியுள்ள விராட் கோலி, உலகக்கோப்பைத் தொடருக்கு சிறப்பாக தயாராகி வருகிறார். 

அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பைத் தொடராக இது இருக்க வாய்ப்புள்ளதால், அவரை உலகக்கோப்பையுடன் வழியனுப்பி வைக்க இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!