விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் இளம் கவர்ச்சி நடிகை
பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் திறந்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் திறந்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அப்போது தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அனன்யா பாண்டே தாமதிக்காமல், 'விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்தார்.
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து அவர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் முழுமூச்சாக களமிறங்க உள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் இது என்றும் கூறப்படுகிறது.