கொடுப்பனவு  குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் இதோ!

கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும்

மார்ச் 7, 2024 - 14:38
மார்ச் 7, 2024 - 14:38
கொடுப்பனவு  குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் இதோ!

மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நிதியமைச்சு முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உதவி பெறும் 410,000 மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு தலா 7,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக நோயாளர் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!